பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lயதொரு விதி செய்வோம் G762 கவியரசர் முடியரசன் “பொங்கலுக்குத் தரும் பரிசா? நன்று! நன்று! போங்களத்தான் இப்பொழுது சொன்ன தெல்லாம் எங்களுக்கு வேண்டாவென் றோடி விட்டாள்; இருநிலத்தை மெழுகி அதிற் கோல மிட்டு மங்கலுநாள் தொழுதங்கே அடுப்பு மூட்டி மஞ்சளிலே தொடுத்தப்புதுப் பானை ஏற்றிப் பொங்கிவரப் பாலூற்றி முனைகள் தேயாப் புத்தரிசி பச்சரிசி உலையி லிட்டு முந்திரியின் பருப்பிட்டுக் கொடியில் காய்த்த முதிர்கனியின் உணங்கலுடன் வெல்லங் கூட்டி உந்திஅது பொங்கிவரப் பொங்க லிட்டாள்; உளக்களிப்பால் பொங்கலோ பொங்க லென்று செந்துவர்வாய்க் குரலெழுப்பிச் சங்கம் ஆர்த்துச் செவ்வாழை யிலைவிரித்துப் படைத்த தன்மேல் வெந்துருகும் நெய்யூற்றி உண்ண உண்ண வேண்டும்வரை பரிமாறி மகிழ்ந்து நின்றாள் மனைக்கினிய மங்கையவள் பொங்கி வைத்து மனமுவந்து பரிமாற நான் சுவைத்துத் es திணற்கினிது தின்ற்கிணிதென் றுண்டே னாகத் தெரிவைமுகத் திதழ் சிறிது மலரக் கண்டேன்; எனைத்திடர்கள் உற்றாலும் தனது ழைப்பை இனியதொரு தன்படைப்பைப் பிறர்பு கழ்ந்தால் மனத்துயரம் மாறிவிடும் மகிழ்வு தோன்றும் மாநிலத்தின் இயற்கையிது வெனவு ணர்ந்தேன்