பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியதொரு விதி செய்வோம் கவியரசர் முடியரசன் ஒப்பனைகள் மகவினுக்குச் செய்த பின்னர் ஒண்டொடியாள் கடைக்கண்ணால் நோக்கி நின்றாள் அப்பொருளை யுணர்ந்தெழுந்து புனலும் ஆடி அவள்தந்த புத்தாடை யுடுத்து நின்றேன் ஒப்பிலவள் முகமலரைத் தாளில் வைத்து இது/ ஒருகொடிபோல் இடைநுடங்க வணக்கஞ் செய்தாள் இப்பழமை எதற்கென்றேன் உம்மை யன்றி எனக்கெனவோர் தெய்வமிலை அத்தான்"என்றாள் செந்தமிழிற் சுவைகூட்டும் மொழிகள் பேசும் தீங்குயிலே நானுனக்குத் தெய்வ மென்றால் சிந்தையினை ஆண்டுகொண்ட நீயே எற்குத் தெய்வமெனச் சொல்வதலால் வேறு காணேன் இந்தவகை *ன்பதனால் பிணைந்து நின்றால் */ இல்லறந்தான் பேரின்பம் இதனைவிட்டு நொந்துழன்று திரிகின்றார் உலக மாந்தர் நுண்மதியே!என்னுயிரே வாழ்க என்றேன் 'வணங்குமெனை வாழ்த்திவிட்டீர் மற்றெ னக்கு வரமெங்கே பரிசில்ெங்கே?'எனத கைத்தாள் நுணங்கிடையே எனைவணங்கி நிற்கும் பாவாய் நொடிப் பொழுதும் பரிசில் தரத் தயங்க கில்லேன் மணங்கமழும் மலர்முகத்துச் சிறுவன் நின்றான் மதிமுகத்தை மாறாமல் நோக்கு கின்றான் கணங்கணமாத் தரவிருப்பம் ஆனால் அந்தக் கள்வன்நமை விடுவானோ கண்ணே என்றேன்.