பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் 74) கவியரசர் முடியரசன் செங்கதிரின் முகங்கண்டு பொய்கை தன்னில் செவ்விதழ்தா மரைமுகமும் மலர்தல் போலப் பொங்கிவரும் மகிழ்ச்சியினால் என்னை நோக்கிப் பூங்கொடியின் இடையுடையாள் துணைவி நல்லாள் துங்கமுகம் மலர்ந்தொளிர முறுவல் பூத்தாள்) துய்யபுனல் ஆடியதால் ஈரஞ் சொட்டத் தொங்கிவரும் குழல் நுனியை முடித்துக் கட்டித் தொடுத்தெடுத்த மலர்ச்சரத்தைச் செருகி வைத்தாள் திங்கள்முகம் மிகப்பொலிய நெற்றி மீது திலகமிட்டு மலர்விழியில் மையும் இட்டுத் தங்கமென மின்னுமிழை பின்னி நெய்த தகதகக்கும் காஞ்சிபுரப் பட்டு டுத்துப் பொங்கலுக்கு நல்வரவு நவில்வாள் போலப் புதுவகைய மாக்கோலம் இட்டு முன்றில் எங்கனுமே மங்கலஞ்செய் தொளிர வைத்தாள் இடையிடையே செம்மண்ணிற் கோலஞ் செய்தாள் வாயிலெலாம் மாவிலையால் தோர ணங்கள் வகைசெய்து முறைசெய்து 'நால விட்டாள் சேயிழையாள் ஒடிவிளை யாடும் என்றன் சிறுமகனைப் பிடித்திழுத்துக் கொஞ்சிக் கெஞ்சி வேயிணையும் மென்தோளில் தாங்கிச் சென்று வெந்நீரை இளஞ்சூட்டில் இறக்கி அந்தச் சேயினையும் நீராட்டி அணிகள் பூட்டிச் செந்நிறத்துப் பட்டுடுத்தி மகிழ்ந்து நின்றாள் * நாலவிட்டாள் -தொங்கவிட்டாள்