பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுயதொரு விதி செய்வோம் G.782 கவியரசர் முடியரசன் விழிப்பொறிக்கு விருந்தளித்தாய் காட்சி தந்து வீணையினால் விருந்தளித்தாய் செவிப் பொறிக்குக் குழைத்தெடுத்த பச்சரிசிப் பொங்கலிட்டுக் கூர்சுவையால் வாய்ப்பொறிக்கு விருந்த ளித்தாய்; தெளிர்த்தநரம் பிசைவிடுத்துக் கொவ்வைவாயின் தேன்மொழியால் நின்குரலாற் பாடியின்பம் திளைத்திருக்கக் கருத்தினுக்கும் விருந்த எளிப்பாய் செங்கதிர்க்கு வாழ்த்திசைப்பாய் மாதே என்றேன். குழைவித்த மென்னரம்பின் யாழ்விடுத்துக் குரலிசையால் இனிமையினைச் செவியில் வார்த்தாள், மழைநிகர்த்த குழலிதன்வாய் மலர்த்துச் செந்தேன் மாரியென இசை:பொழிந்தாள்: முன்னர் மீட்டுக் கழைபிழிந்த சாறெனுமர் றிசைத்த யாழ்தான் கலக்கமுறத் தோல்விபெற வென்றி கொண்டாள்; கழைகொடுத்த குழலிசையோ எனம யங்கக் களிகூர மிடற்றிசையால் நனையச் செய்தாள் மனங்குளிர மேல்நடுகீழ் எனவு ரைக்கும் வழிமுறையால் இன்னிசையை இசைத்துப் பின்னர் *அனங்கவிழும் நடையுடையாள் பொருள்வி ளங்கா அயன்மொழியின் இசைப்பாடல் ஒன்றெடுத்துத் தனந்தனந்தோம் தகிடவென முழங்கிக் கைகள் தாளமிடப் பாடினiள்காண்; கேட்டு நெஞ்சம் சினங்கெழும முகஞ்சிவந்து கைகள் கொண்டு செவியடைத்தேன் உளந்துடித்தேன் நிறுத்து கென்றேன்

  • அனங்கவிழும்-அன்னங்கவிழும்