பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புயதொரு விதி செய்வோம் G345 கவியரசர் முடியரசன் ஒன்றாக நாமிணைந்தால் ஊறுசெயும் பகைமையெலாம் ஒழிந்தே போகும்; நன்றாக எண்ணிப்பார்; நாலாயி ரஞ்சாதி நமக்குள் வைத்தோம்

  • ஒன்றாரும் புகுந்துவிட ஓட்டைகளை § அமைந்துவிட்டோம்; உட்பு குந்தோர்

வென்றாள வழிசமைத்தோம்; வெறுங் கூச்சல் போடுகிறோம்; விடியல் காணோம். இனவுணர்வு நமக்குள்ளே எழுந்துவிடில் ി நமைப்பகைமை என்ன செய்யும்? இனநலமே குறியாக எப்பொழுதும் அப்பகைவர் இயங்கு கின்றார்; கனவுலகில் திரிகின்ற தமிழ்மகனே உண்மைநிலை கண்டு கொள்வாய்; உனையொன்று வேண்டுகிறேன் உன்னினத்தை முன்னேற்ற ஒன்று சேர்வாய் தமிழரெல்லாம் ஒன்றானார் தமிழர்க்குப் பகைவரெல்லாம் தாழ்ந்து போனார் அமிழ்தனைய இம்மொழியை அகம் மகிழு என்செவியில் ஆரு ரைப்பார்? இமிழ்கடல்சூழ் ಡ್ಗಿಆ। =/ சாதியினை எரித்தே விட்டார் தமிழினந்தான் இனியுண்டு தலைநிமிர்ந்து வாழ்வரெனச் சாற்று வார்யார்?

  • ஒன்றார்- பகைவர்