பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் €86৯ கவியரசர் முடியரசன் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS மண்ணுங் கெடுத்தனர் விண்ணுங் கெடுத்தனர் வாரியின் நீருங் கெடுத்தனரே தீய எண்ணம் உடுத்தவர் என்னென்ன கேடுகள் ஈங்கினும் செய்யப் படித்தனரோ? விண்வெளிப் போருக்கோ விஞ்ஞானங் கற்றனர் வேதனை நெஞ்சினில் விஞ்சுதடா-மக்கள் பண்ணிய குண்டுகள் மக்களை மாய்த்திடப் பாரதைக் கண்டு பொறுத்திடுமோ? மக்களைக் கொன்றபின் மாநிலம் ஏதடா? மாமதி யொன்றை மறந்தனரோ?-நம்மைக் கொக்கென எண்ணினர்,கொக்கரிப் போர்தமைக் கூடி யெதிர்த்தல்நம் வேலையடா! உலகிற் பிறந்தவர் ஒவ்வொரு மாந்தரும் o உரிமை படைத்தவர் உண்மையிதாம்-இங்குக் இ| கலகம் விளைந்திடின் காய்ந்து தடுத்திடக் கையை உயர்த்துதல் வேண்டுமடா உண்மையிற் போர்வெறி ஒட்டிட யாவரும் ஒன்று திரளுதல் வேண்டுமடா-இந்த எண்ணம் மிகுந்தவர் எம்மவர்தோழரென் றெண்ணி நடந்திட வேண்டுமடா. 20-5–1987 "