பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் 39D கவியரசர் முடியரசன் உண்மையை சிறிது மில்லார் ஊரினை ஆள வந்தால் கண்ணியம் நிலைப்ப தெங்கே? கயமைதான் ஒங்கி நிற்கும்; பெண்மையை விலைக்கு விற்போர் கற்பினைப் பேச வந்தால் மண்மிசை என்ன வாழும்? */ மதிபுர்ளர் நகைப்ப ரன்றோ? /ァー A தடியடி குத்து வெட்டு, தையலர் கற்பை யுண்ணுங் கொடியரின் செயல்கள், கொள்ளை கொலைகளுங் கூட லன்றி விடியலா காணல் கூடும்? விழிகளா துயிலும்? எங்கும் இடியொலி கேட்ப தன்றி இன்னொலி யாதுங் கேளேன். நாட்டினைக் கருத வில்லை நலங்களும் விளைய வில்லை வீட்டினைக் கருது வோரால் வேறென்ன விளையு மிங்கே; கேட்டுணர் வுடையோர் ஆண்டால் கீழ்மைதான் விஞ்சும் இங்கே நாட்டுணர் வுடையோர் வந்தால் நலமெலாம் பொங்கும் பொங்கும்.