பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் 31.2 கவியரசர் முடியரசன் சரிந்துவிட்ட தமிழர்க்குத் தமிழியக்கம் எனும் நூலைத் தந்து சென்றாய்; - திருந்திவிட்ட தமிழரினிச் செயற்படுவil 1がつ / 2 என்றிருந்தேன்தெளிய வில்லை; குருந்துவிட்ட மழலையர்க்கும் கொடுக்கின்றார் அயன்மொழியை கொடுமை யன்றோ? மருந்துவிட்டென் மனப்புண்ணை ஆற்றுவர்யார்? மானத்தை மறந்தே போனார். சாதிக்கு நீ கொடுத்த சாட்டையடி போதாதோ? தமிழர் இன்னும் மோதிக்கொண் டழிகின்றார்; முற்போக்குப் பாதைசெல முயல வில்லை; *மேதித்தோல் போர்த்தவுடல் மேதியினிற் பெற்றனரோ? மேடை யேறிப் போதிக்க மட்டுமவர் மறப்பதில்லை பாழாகிப் போன மாந்தர். * எவன்விட்டான் சாதியினை? எவன் செய்தான் கலப்புமணம்? எவனோ எங்கோ தவறிவிட்டான் செய்துவிட்டான் தவிக்கின்றான்; மற்றவனோ சாதி தன்னைச் சுவர்வைத்துக் காக்கின்றான் சொல்வீரங் காட்டுகிறான் துணிய வில்லை; இவன்கெட்ட கேட்டுக்கு நாற்றாண்டு விழாவெடுக்க எழுந்தும் விட்டான். சமேதித்தோல் - எருமைத் தோல்