பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

புதியதோர் உலகு செய்வோம்

பரிசுகளைக் கொண்டு, தென்னாப்பிரிக்க இந்திய சமூக மேம்பாட்டுக்கு ஒரு நிதியமைக்க முடிவு செய்தார். ஆனால் அன்னை கஸ்தூரிபாவுக்கோ அந்தப் பரிசுகளில் இருந்த ஒரே ஒரு வைரமாலையையேனும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அண்ணலோ அது, சமுதாயப்பணிக்காக அளிக்கப்பட்ட கொடை என்று பிடிவாதமாக மறுத்தார். ‘நமக்கு இல்லாவிட்டாலும், நாளை மகன்கள் திருமணத்துக்கு அது உதவும் அல்லவா!’ என்றார் அந்தப் பேதை, ஆனால் காந்தியடிகள் அந்த ஊசிமுனை இடத்தையும் அழுத்தமாக அடைத்துவிட்டார்.

ஆனால், எந்தப் பற்றுதலுக்கு இடம்கொடுக்கலாகாது என்று நூற்றாண்டுகளாக ஆன்றோரும் சான்றோரும் எச்சரித்திருந்தார்களோ, அந்தப் பற்றுதல் இந்நாள், குஞ்சு குழந்தையிலிருந்து, ஆண்,பெண், முதியோர், ஏழை, பணக்காரர் எல்லோரும் மனமுழுதும் ஆக்கிரமிக்க இடம் கொடுத்திருக்கின்றனர்.

‘லட்சம், கோடி, தங்கம், போக சாதனங்கள்’ என்று புலனின் பங்கள் கட்டவிழ வெறிபிடிக்கும் நிலையில் சமுதாயம் பரபரத்து அலை பாய்கிறது. இந்த நோக்கில்தான் மூளை, அறிவு, ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம், கொலை, கொள்ளை எல்லாம் வளருகின்றன. இடை இடையே சிறிது ஊறுகாய் போல், சத்தியங்கள், காந்தி, வள்ளுவர், புத்தர், இயேசு, பாரதி, ஸத்குரு தியாக ப்ரும்மம்... என்ற வழிபாடுகள்!

காந்தியுகத்தில் அரிச்சந்திர நாடகமோ, கிராமிய நீதிக்கதைகளோ நாடோடிப் பாடல்களோ, மக்களின் கலைவடிவங்களாகவும் தொடர்புச் சாதனங்களாகவும் திகழ்ந்தன. அந்நாள் அச்சாதனங்களுள் சாம்பலுக்குள் நெருப்புப் பொறி போல் போற்றிக் காத்த சத்தியத்தை