பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

113

வாயிலாக இந்த நெறி சிறுபிராயத்திலிருந்தே அறிவுறுத்தப்பட்டது. நாம் இப்போது புத்தாயிரம் என்ற நுழை வாயிலுக்கு வந்துள்ளோம். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், மனித நாகரிகம் பல்வேறு வகைகளில் மாற்றமடைந்து வந்திருந்தும், வாழ்க்கைச் சாதனங்களும் தேவைகளும் பெருமளவுக்கு மனித சமுதாயத்தைப் பாதித்திருந்தும் தன்னலமற்ற அன்பு பாராட்டுவதுதான் மனிதர் வாழ்வியல் நெறியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் எந்த வகையான மாற்றமும் வந்துவிடவில்லை.

அதுவும், உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி வாழ வேண்டும் என்ற இலட்சியத்தைக் கைக்கொண்டு வாழ்ந்த ஆன்றோர், எக்காலத்தும் 'பற்றுதல்’ என்ற சிறு பொறி உள்ளே நுழைய ஊசி முனையளவு இடமும் கொடுக்கலாகாது என்று தங்கள் வாழ்வின் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளனர்.

நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த காந்தியடிகள், நமது வாழ்வில், ஒரு மகத்தான திருப்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதுதான் நம் அரசியல் விடுதலை இது காறும் உலக வரலாற்றில் இல்லாத வகையில் போரும் பகைமையும் இல்லாமலேயே அஹிம்சை, அன்பு என்ற பாதையில் நம்மை ஈடுபடுத்தி, அந்த வெற்றியை நமக்களித்தார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவர் விடை பெற்றபோது அங்கிருந்த இந்தியச் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணிக்காக விலையுயர்ந்த பரிசுகள் காந்தி தம்பதிக்கு அளிக்கப் பெற்றன. அதுவரை அவர்களிடம் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த அணிமணிகள் இருந்ததில்லை. காந்தியடிகள் இரவு முழுவதும் உறங்கவில்லை. பின்னர், அந்த விலை உயர்ந்த

பு.உ. - 8