பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

149


21. மெய்ப்படாத
முப்பது சதவிகிதம்!


ஐந்து மாநிலங்களில் பெண்ணரசு ஏற்பட்டதைக் குறிப்பாக்கி, வியத்தகு முன்னேற்றம் என்று, எல்லாப் பத்திரிகைகளும் கருத்துரைத்திருக்கின்றன. ஆனால் ஜனநாயக ஆட்சியில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று முப்பது சதவிகிதம் ஒதுக்கீடு கேட்டுப் போராடிய இலட்சியத்துக்கு இது ஒருவகை வெற்றியா? உண்மையாகவே பெண்குலம் பெருமைப்படக்கூடிய முன்னேற்றம்தானா? எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஒரு நிறை. எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று மும்முறை அடித்து முழங்கிய அமரகவியின் வாக்கு மெய்ப்பட்டிருக்கிறதா? பெண்களும் ஆண்களும், வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்று, தங்கள் அரசைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதன் விளக்கமா, ஐந்து மாநிலப் பெண்ணரசுகள்?

இந்திய ஜனநாயகத்தின் முதல் பெண் பிரதமராக, இந்திரா காந்தி பதவியேற்றபோது, உலகமே வியந்தது. நாமும் மகத்தான சாதனை என்று பெருமை அடைகிறோம்.

அவர் பதவிக்கு வருவதற்கு நேரு குடும்பம், பிரதமராக இருந்தவரின் மகள் என்ற பின்னணியே பெரிதும் வலுவாக இருந்தது. இதை மறுக்க முடியாது. இந்தியாவின் வாக்குரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஏறக்குறைய வேனும் ஒரே தரத்தில், அரசியலுணர்வு பெற்றவர்களாகச் செயல்படும்போதுதான் ஜனநாயகப் பிரதிநிதித்துவம் உண்மையாக மலரமுடியும். ஆனால், சுதந்திரம் பெற்று,