உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

புதியதோர் உலகு செய்வோம்

நாம் குடியாட்சி உரிமையைப் பெற்றபோது, எழுத்தறியாமையும், வறுமையும் மூடநம்பிக்கைகளும் மிகுந்த மக்களை, சிறந்த வாக்காளராக முன்னேற்றுவதற்கான எந்த ஒரு திட்டமும் கூர்மையாகச் செயல்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில், பல தேர்தல்களையும் கட்சி அரசியல்களையும் கண்டிருக்கும் மூன்று தலைமுறை வாக்காளர்கள், இன்னமும் ஜனநாயக ஆட்சி பற்றியோ, உரிமை பற்றியோ, பொறுப்பு பற்றியோ உணராதவர்களாகவே இருக்கின்றனர்.

மக்கள் தொகையில் சரிபாதி பெண்களாக இருந்தபோதும், சட்டசபைகளில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் பத்து சதவிகிதம்கூட இல்லாத நிலைதான். எனவே ஒதுக்கீடு தேவை என்று எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பெண்கள் தங்களுக்குரிய மனித மதிப்புகளைக் கோருவதே ஆண்களுக்கு எதிரான கோஷம் என்று கருதப்படுகிறது. இலக்கியம் போன்ற தளங்களில் பெண்ணினம் என்று ஒதுக்கப்படுகிறது.

'ஜனநாயகம்’ என்ற இலக்கை வைத்து நாம் ஆய்வு செய்யும்போது, இந்தியாவின் முதல் பெண் பிரதமர், அப்படிப் பதவிக்கு வரவில்லை. செல்வாக்குப் பெற்ற அரசியல் கட்சி, அக்கட்சித் தலைமையின் செல்வாக்கு இரண்டுமே தலைமைப்பதவியை நிர்ணயிக்கின்றன. இந்திரா காந்தியைப் போல் அல்லது அவரிலும் சிறந்த அனுபவம் பெற்ற பெண்மணிகள் அப்போது இல்லாமல் இல்லை. அவர்கள் சார்ந்த கட்சி, பின்னணி இரண்டும் மட்டுமே பெண்களின் பதவிகளைத் தீர்மானிக்கின்றன. இந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில் ஜனநாயகத்தின் மிகச் சிறந்த பண்புகளையும் பொறுப்புகளையும் உணர,