பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

புதியதோர் உலகு செய்வோம்

மாமியார் அதட்டலும், கணவனுடன் மைத்துனர் அடிப்பதும்கூட நிகழ்கின்றன.

கிராமங்களில், கூட்டுக் குடும்பங்களில் ஆடவர் வயலிலோ கொட்டிலிலே வரும் வருமானத்தைக் கள்ளிலும் சூதிலும் செலவு செய்ய ஒற்றுமையாக இருப்பார்கள். ஆனால் பெண்கள், தங்கள் புழுக்கங்களை ஒருவர் மீது ஒருவர் வசைபாடிக் கொண்டும் ஏசிக் கொண்டும், பேசிக் கொண்டும் அழுது கொண்டும் உழைப்பில் அழுந்திக் கொண்டும் அன்பும் இதமும் மேன்மையும் அறியாத பாழ்குழியில் விழுந்த நிலையில் காலம் கழிக்கின்றனர். நாம் ஏன் இந்த நிலைக்கு ஆளானோம் என்று நினைத்துப் பார்க்க, அவர்களைப் பிரித்து வைத்திருக்கும் சக்திகள் இடம் கொடுப்பதில்லை.

‘எனக்கொன்னும் மறுப்பு இல்லை. என் மனைவிதான் சம்பிரதாயம் குறையக்கூடாது என்கிறாள்’ என்று தந்தை நழுவுவார்.

‘அம்மா சொல்கிறபடி தான் எல்லாம்’ என்பான் பையன்.

ஆக, தாயாராகிய பெண்மணி மகனுக்குப் பெண்ணைக் கொடுக்க வரும் வீட்டாரிடம் பேரம் பேசுவதிலும் கறப்பதிலும் பெருமை கொள்கிறாள்.

நாம் நம் இனமான ஒரு பெண்ணின் நல்வாழ்விலும் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்கிறோம். அவளை வருந்தச் செய்யலாகாது என்ற உணர்வே சிறிதும் அவளிடம் தலைகாட்டுவதில்லை.

பொருளாதார உரிமை பெற்று உழைக்கும் மகளிரிடமும், உரிமை பெயருக்குத்தான் இருக்கிறது. உண்மையில் ஆணே கோலோச்சுகிறான். தனது