பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

33

முடியாட்சியில் தான் அத்தகைய கேடுகளுக்கு இடமிருக்கும்; மக்களாட்சி, மக்களே மக்களை, மக்களுக்காக ஆண்டு கொள்வது என்ற முறையில் எதேச்சாதிகாரத்துக்கு இடமில்லை என்று நம்பி எதிர்பார்த்தது பொய்த்துவிட்டது.

கொள்கையில்லாத அரசியல் கட்சிகள், தனிமனிதர்களுள் சுயநலங்களைக் கொழுக்க வைக்கும் சூதாட்டங்களில் ஈடுபடுவதனால் எத்துணை விபரீதங்கள் ஏற்படுமோ, அத்துணையும் ஏற்பட்டிருக்கின்றன.

இப்போது, கடிகாரத்தைத் திருப்பி வைப்பது சாத்தியமா? எங்கிருந்து, எப்படி இந்தச் சமுதாயத்தில் இந்நாள் வேரோடிப் போன தீமைகளைக் களைந்து நல்ல உயிரோட்டத்தை ஏற்படுத்த முடியும்?

1. பூச்சி விழுந்து சேதமாகிவிட்ட பயிரைக் காப்பாற்றச் சக்தியைச் செலவழிப்பது ஒருபக்கம் இருந்தாலும், இனி தலை நீட்டும் பயிரை, அதே பூச்சிகள் தொற்றாமல் காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு முதல் படி, குடும்பம் என்ற அமைப்பைச் செம்மையாக்க வேண்டும். அடுத்த படி, கல்விச்சாலைகள் வருங்காலச் சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

குடும்பம் என்ற அமைப்பு, ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கும் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், ஆணுக்குச் சந்ததி பெருக்கவும் அமைந்ததென்று கொள்ளப்படுகிறது. இது முற்றிலும் சரியன்று. ஆண் முதன்மைச் சமுதாயத்தில் அவனுக்குத் துணையாக இருந்து,அவன் தேவைகளைனைத்தையும் குறிப்பறிந்து நிறைவேற்றி வைக்கவும், ஆண் மக்களைப்

பு.உ-3