பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

45

கொள்வதற்கும் மட்டுமே பயன்படுகின்றன. முப்பத்து மூன்று சதவிகித ஒதுக்கீடு - அரசியல் சார்ந்த பிரதிநிதித்துவம் பெறுவதற்கு என்ற கோரிக்கை சின்னபின்னமாக இழுக்கப்படுகையில், பல்வேறு பாசாங்குகளும் வேடங்களும் கலைய, ஆணாதிக்கத்தின் கோர உருவங்கள் தெரிகின்றன. பெண்கள் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து, ஒர் ஆணுக்கு உரிய அவனுக்குள் அடக்கம் என்ற உரிமை பெற்ற, பெறாத முத்திரைக்குள் அறியப்பட உட்பட்ட நாளிலிருந்தே அந்த அடையாளங்களில் இருந்து மீள வேண்டும் என்ற உணர்வே இல்லாத மனக்கோட்டத்துள் புதைந்து போயிருக்கிறாள். ஒரு நாள், இரண்டு நாட்கள், சில மாதங்கள் அல்ல - நூற்றாண்டு, பலப்பல நூற்றாண்டுகள் அவன் இச்சை, அவன் தலைமை, அவன் அடையாளங்கள் என்று ஊறிப் பதம் பெற்றிருக்கிறாள். ஒரு பெண்ணுக்குத் தாயும் தகப்பனும்கூட உரியவர்களாக முடியாது. அவள் உடலின்மீது, உரிமை கொண்டவன்தான் அவளுக்கு நாயகன். அந்த நாயகன் கயவனோ, காமுகனோ, கண்ணியமானவனோ, எப்படி இருந்தாலும் அவன் மதிப்பை, அவன் உயர்வை அவள்தான் தூக்கிப் பிடிக்கிறாள். அவனுக்காக, அவன் வித்தினால் பெறும் ஆண்மக்களுக்காக அவள் தன்னைத் தேய்த்துக் கொள்வதில்தான் மேன்மை பெறுகிறாள். அவள் பொதுவாழ்வுக்கு வரும் வாய்ப்புகள் நேர்ந்தாலும், கட்டியவன் காப்பாளன் என்ற நிலையில் ஆண்கள் இல்லை என்றாலும் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு தான் அவள் தலைதூக்க முடியும்.

அரசியல் பிரதிநிதித்துவம் என்று வரும்போது, ஒரு பெண் ஆண் ஆதிக்கத் தடைகளை மீறும் உணர்வுப்