பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. இன்றைய பாரத குமாரி


இன்னுமொரு இளம்பெண் காட்சி ஊடகத்துறையில் கால் வைத்துப் புகழ்பெறும் தருணத்தில் தற்கொலை செய்து கொண்டாள்.

இன்றைய சமுதாயத்தில் ஓசைப்படாமல் நிகழும் பெண் கருவழிப்புகள், பெண் சிசுக் கொலைகளில் இருந்து, இத்தகைய தற்கொலைகள் வரை கணக்கிட்டால், பெண் வாழும் நம்பிக்கையையே இழந்து கொண்டிருக்கிறாள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

காட்சி ஊடகங்களில் தொழில் உண்மைகளுமே வெளித் தெரிவதில்லை. ‘சமுதாயப் பய’ உணர்வு அவர்களுடைய வாழ்க்கையின் நிதர்சனங்களை இரும்புத்திரையாய் மறைக்கின்றன. அவ்வப்போது வெளித் தெரியும் தற்கொலை முயற்சிகள், தற்கொலைகள் - காதல் தோல்வி என்று ஊடுருவ முடியாத மஞ்சுத்திரையால் மூடப்பட்டு விடுகின்றன.

ஆனால் காட்சி ஊடகங்களின் மையமான வணிகப் பொருளே ‘பெண்’தான். உடல்ரீதியான விளம்பரப் பொருளாக மட்டும் அவள் மதிப்பிடப்படவில்லை. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சின்னத்திரை - சானல்களில் காட்டப்படும் மெகா தொடர்களில் பெண்கள் வழக்குரைஞர்களாக, காவல்துறை அதிகாரிகளாக, மருத்துவர்களாக, பத்திரிகையாளராக பல்வேறு வேடங்களில் கவர்ச்சி காட்டுகிறார்கள். ஆனால் அந்தப் பாத்திரங்களின் செயல்பாடு, எந்தப் பெண்ணையும் மரபாசாரங்களை மீறி விழிப்புணர்வு கொள்ள ஓர் இழைகூட இடம் கொடுக்காது. பெண்களே, நீங்கள்