பக்கம்:புதிய கோணம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புதிய கோணம்

கூறுவதற்கும் தெளிவான சான்றுகள் கிடைப்பதாகத் தெரியவில்லை. “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்’ (சிலம்பு:16, 18 வரிகள்) என்ற அடியைத் தவிர, அந்தக் கருணை மறவனின் சமயம் யாது என்பதை விளக்கும் சான்றுகள் இருந்திருப்பதாகத் தெரிய வில்லை. என்றாலும், இத்தமிழ் நாட்டில் பண்டு தொட்டுப் பயின்று வருவனவாகிய சைவ, வைணவக் கொள்கைகளின் அடிப்படையில் இக்காப்பியத் தலைவியின் வளர்ச்சியை ஆராய்வதில் தவறு ஒன்றுமில்லை.

‘யான், எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்’ என்று தமிழ் மறையும், “அற்றது பற்று எனில் உற்றது வீடு’ என்று வைணவ மறையும் அறுதியிட்டுக் கூறுகின்றன. எனவே, பற்றற்ற நிலையில், அகங்காரம் எனப் பெறுவதாகிய யானும், மமகாரம் எனப்பெறுவதாகிய ‘எனதும் அழிந்த நிலையில், வீடு கைமேற் கிடக்கும் என்ற கருத்தை அறிகின்றோம். மிகப் பழமை ஆனதாகிய தமிழ் மறையும், இடைக் காலத்ததாகிய வைணவ மறையும் இந்த ஒரே கருத்தை வலியுறுத்திச் சொல்கின்றமையால் இக்கருத்து, மிகப்பழைய காலந்தொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கி வந்த ஒன்று என்று நினைப்பதில் தவறில்லை.

ஒருவன் எத்துணைச் சிறப்புடையவனாயினும் அவன் பிறப்போடு ஒன்றியுள்ள அகங்காரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/10&oldid=659801" இலிருந்து மீள்விக்கப்பட்டது