பக்கம்:புதிய கோணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புதிய கோணம்

வெளியிட்டுக் கொண்டிருக்கும்போதே அதைக் காணுகின்ற பலருள் ஒருவர் மட்டும் வெளியிடும் உணர்ச்சியை அறிந்து கொள்ளவும், ஏனையோர் ஒன்றும் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கவும் உள்ள சூழ்நிலையில் உணர்ச்சியை வெளியிடும் உறுப்பு யாது? மனித உறுப்புகளுள் தலை சிறந்ததாகிய கண்தான் என்று கூறத் தேவையில்லை. இதனை நன்கு அறிந்த வள்ளுவனார் அக்கண்ணாகிய உறுப்புப்பற்றிப் பல இடங்களில் குறிப்பிடுவதுடன் ஒரு தனி அதிகாரமே கண்ணைப் பற்றிப் பேசுவதற்காக ஒதுக்குகின்றார். பிறர் அறியாமல் ஒருவருக்கு மட்டும் செய்தி அனுப்பும் அக்கண்ணின் திறத்தையும், ஒரே நேரத்தில் ஒருவருக்குத் துன்பத்தையும் இன்பத்தையும் மாறி மாறி அளிக்கின்ற திறத்தையும் பேசுகின்றார்.

“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே யுள’’ (குறள்-1099)

முன்பின் தெரியாதவர் போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதல் காதலர்கட்கு இயல்பு)

“இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” (குறள்-109)

இவளிடம் இரண்டு LIT 5! உண்டு; ! எனக்கு நோய் தரும் பார்வை, மற்றது அந்நோயைத் தணிக்கும் பார்வை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/100&oldid=659802" இலிருந்து மீள்விக்கப்பட்டது