பக்கம்:புதிய கோணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புதிய கோணம்

என் காலுக்கு அமைந்தது’ என்று கூறமாட்டான். ஆனால் ஒரு மணமகனுக்கு ஏற்ற மணமகள் கிடைத்த பொழுது, மணமகனுக்கு அமைந்த மணமகள் என்று கூறக் கேட்கிறோம். அமைதல் என்ற சொல்லை வெறும் பொருத்தம் என்ற பொருளில் வழங்காமல், எல்லா வகையானும் பொருந்திய வழியே இன்றும் பயன்படுத்துகிறோம். எனவே அமைவர் என்று ஆசிரியர் கூறுகையில் உண்டவரின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டி விடுகிறார். உற்ற நண்பராக இருப்பவர் தருகின்ற நஞ்சைக் கண்ணோட்டம் காரணமாகவோ, கர்வம் காரணமாகவோ வாங்கி உண்டு விடுபவர்களும் உண்டு. ஆனால் முனைப்புக் காரணமாகச் செய்து விட்ட பிறகு அந்த மனநிலையில் அச்சமும் வெறுப்பும் குடிபுகுந்துவிடும். செயற்கரிய செயலைச் சந்தர்ப்பம் காரணமாகச் செய்தவருங் கூடப் பின்னர் இருந்து பச்சாத்தாபப்படுதலை அறிவோம். ஏன் செய்தோம் என்று கழிந்ததற்கு இரங்கும் மனப் பான்மை மனித மனத்தின்பாற்பட்டதே ஆகும்.

அவ்வாறு கழிவிரக்கம் கொண்டவர். அதன் Liu JTTT3, அவ்வாறு தம்மைச் செய்யத் துண்டியவர்கள் மாட்டு வெறுப்படைதல்

இயற்கையேயாகும். அந்த வெறுப்பைத் தூண்டிய அவர் அறியுமாறு வெளியிடுதலும் உண்டு; கொஞ்சம் பண்பட்டவர் ஆயின் வெளிக்காட்டாமல் மனம் புழுங்கி இருத்தலும் உண்டு. செயல் நிகழ்ந்துவிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/118&oldid=659820" இலிருந்து மீள்விக்கப்பட்டது