பக்கம்:புதிய கோணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைப் பண்பு 119

பயன் மரம் என்ற உவமையால் பிறர் யாரும் முயன்று நீர் ஊற்றாவிடினும், தன் மாட்டு ஏறிப் பறித்துக் கொள்ளும் முயற்சியைச் செய்பவர் யாவர்க்கும் பயன் தரும் என்பது பெறலாகும். அதே போல ஒப்புரவு செய்வான் தன்னை விரும்பி வந்தடைந்தவர்க்குத் தப்பாது உதவுவான் என்பதைப் பெற வைத்தார். பயன் மரம் என்றமையால் அதில் உள்ள பழம் ஒன்றே பயன்படும் என்பதும், அது பழுக்கும் பருவம் ஒன்றில் மட்டுமே பிறர்க்கும் அதனைத் தரும் என்பதும் பெற்றாம். மூன்றாவதாக உள்ள மருந்து மரம் மிகச் சிறந்த உவமையாய்ப் பாரிபோன்ற பெரு வள்ளல்களின் வள்ளன்மைக்கு எடுத்துக்காட்டாய் நிற்பது. மருந்து மரம் என்றமையின் வேர் முதற்கொண்டு. அடிமரம், பட்டை, பழம், விதை ஆகிய அனைத்தும் பிறர்க்குப் பயன்பட்டு நிற்கும் இயல்பை 2-6x165)LDu israi) அறிவித்தார்.

‘முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே (புறம்: i)

என்று புலவரால் பாராட்டத்தக்க முறையில் அனைத்துப் பொருளையும் பரிசிலர்க்கு வழங்கி, அதனுடன் அமையாது தன்னையே வேண்டும் என்று கேட்டவர்க்கும் மாறாமல் தன்னைப் பரித்தியாகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/127&oldid=659830" இலிருந்து மீள்விக்கப்பட்டது