பக்கம்:புதிய கோணம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கமும் இலக்கியமும் 125

அன்னை என நினை.இ, நின்னடி தொழுதெனம் பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் - முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்; இன்னும் இன்னும் எம் காமம் இதுவே !

(பரிபாடல்: 13)

செருவேற் தானைச் செல்வ! நின் அடி உறை,

உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,

பிரியாது இருக்க-என் சுற்றமோடு"உடனே!

(பரிபாடல்: 18)

மேலே காட்டியுள்ள மேற்கோள்கள் கேவலம் அந்த உலகத்தில் உள்ள பொருள்கள், அநுபவங்கள் நமக்கு வேண்டும் என்று பழந்தமிழர் கேட்கவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இவற்றுக்கு முடிமணியாகப் பரிபாடலின் 5 ஆம்

isri (al)

யாஅம் இரப்பவை பொருளும், பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் - உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!

(பரிபாடல்: 5)

பழந்தமிழர் கண்ட பக்தியில் இறைவனிடம் பொன், பொருள், முதலாயவற்றைக் கேட்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/133&oldid=659837" இலிருந்து மீள்விக்கப்பட்டது