பக்கம்:புதிய கோணம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 புதிய கோணம்

இவை இரண்டும் இருக்கின்ற வரை இரவலர், விருந்தினர் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் இளையான் குடிமாறர் போன்ற பக்தர்கள் அகங்கார மமகாரங்களில் இருந்து நீங்கியவர் ஆதலால் அவர்களை இரவலராகவோ, நொதுமலர் ஆகவோ, உறவினராகவோ, விருந்தினராகவோ கருதவில்லை. பின்னர் எப்படிக் கருதினார்கள்? இந்த ஆழமான வினாவிற்குச் சேக்கிழார் அற்புதமாக விடை இறுக்கிறார்.

தெருவில் நேர வந்தவர் யாவ ராயினும் ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் (பெபு: 442)

என்று முடிவு செய்துவிட்டார். அடியார்கள் என்று முடிவு செய்துவிட்டால் அங்கு வேறுபாடு தோன்றக் காரணம் இல்லை. யாராக இருந்தாலும் அவர்களை ஒரே மாதிரியாக நினைந்து எவ்வித வேறுபாடும் பாராட்டாமல் உபசரித்தார் என்பதை அழுத்தமாகக் கூறுவதற்காகவே, நேரே வந்தவர் யாவர் ஆயினும்’ என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார். -

இதுவரை கூறியவற்றைப் பொதுப்படையாக நோக்கினால் உலகத்தில் வேறு எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்கள், பக்தர்கள் என்பவர்களைக் காட்டிலும் இந்தத் தமிழர்கள் கண்ட பக்தர்கள் முற்றிலும் மாறு பட்டவர்கள் என்பதை அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/138&oldid=659842" இலிருந்து மீள்விக்கப்பட்டது