பக்கம்:புதிய கோணம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றோர் சிந்தனை 151

மேலும் ஆசைப்படுவதனால், மேலும் மேலும் சேகரிக்க வேண்டுமென்ற பேராசை உந்த, வாழ்க்கையில் அநுபவிக்க வேண்டியவற்றை, உரிய காலத்திலே அநுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. தன்னுடைய குடும்பத்திற்கும் கூடச் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்ததனால்தான் ஆசை அறுமின்கள்’ என்று சொன்னார். ஆசை அறுமின்கள் என்று சொன்னவுடனே எல்லோரும் துறவிகளாகப் போய்விட வேண்டுமென்று திருமூலர் கூறவில்லை. இந்த நாட்டுக்காரர்கள் துறவை ஏற்றுக் கொள்ளவேயில்லை.

“மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை”

(திருமுறை: 3, 282, )

என்று சொல்லுகிறார் ஞானசம்பந்தர். ஆகவே ஆசை தேவையான அளவுக்கு மேல் விரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கமாகும்.

இந்த ஆசை அதிகப்படுவதனால் 5Ta ஆகிறது? மனித நேயமே நம்மைவிட்டுப் போய்விடுகிறது. தன்னுடைய குடும்பத்தில் பிள்ளை முதலானவர்கள் அதிகமாக இருந்தாலும் கூட, இவர்கள் எல்லாம் இந்தப் பொருளை வீணாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/159&oldid=659865" இலிருந்து மீள்விக்கப்பட்டது