பக்கம்:புதிய கோணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கோணம் 9

விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை ‘

(சிலம்பு : 16, 71)

என்ற அடிகளால் அறிகின்றோம்.

இவ்விரண்டு பகுதிகளிலிருந்தும், இதனை அடுத்துக் கோவலனை நோக்கி, “மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின், ஏற்று எழுந்தனன் யான்” என்று கூறுகிற பகுதியிலிருந்தும் முன்பு சொல்லப் பெற்ற மாயை, கன்மம் என்ற இரு குற்றங்களையும் ஒருவாறு போக்கி வாழ்பவராகவே காட்சியளிக் கின்றார். ஆண்டான்-அடிமைத்திறத்தில், தலைவ னாகிய கோவலனிடத்து முற்றும் தம்மைச் சரணாகதியில் அமிழ்த்துவிட்ட இப்பெருமாட்டி, இவ்விரு குற்றங்களிலும் அகப்படக் காரணம் இல்லை என்றாலும், விடை சிறப்புடைய தாயினும், விடை கூறியவர் மனநிலையைக் காட்டாமற் போகவில்லை. இதுவரை அவள் அடக்கி வைத்திருந்த சினம் மெல்லத் தலைதுாக்குகிறது. உள்ளடங்கிய சினமாகலின் சுடுசொற்களால் வெளிப்படாமல் மனத்திலுள்ள கசப்பை மட்டும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துவிடக் காண்கிறோம். உயிர்க் காதலன்

பிரிவால் அவள் கவலையுறவில்லை; ஆனால், கடமைகளை நிறைவேற்ற முடியாமைக்காக வருந்தியது போல அவ்விடை அறிவிக்கிறது.

அகங்காரம் மெல்லத் தலை தூக்கித் தன் இருப்பை அறிவிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/17&oldid=1390128" இலிருந்து மீள்விக்கப்பட்டது