பக்கம்:புதிய கோணம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட கனவு 169

உழைப்பாளிகள் என்று நாம் கூறுவதுபோலக் கூறுவது கவிஞனுக்கு அழகன்று. எனவே அவர்கள் உழைப்புக்கு ஒரு எல்லை காட்டுகிறான். இதுவரை அவன் கூறிய பாடல்களால் நாட்டின் இயற்கைவளம், நீர்வளம் நிலவளம் முதலியவற்றைக் கண்டவுடன், எவ்வித முயற்சியும் இல்லாமலே இந்நாட்டு மக்கள் இப்பயனை அடைந்துவிட்டார்கள் போல் இருக்கிறது என்று நம்மில் யாரேனும் நினைத்து விடுவோம் அல்லவா? அதனை மறுத்து மக்கள் உழைப்பின் எல்லையைக் கூற வந்த கவிஞன் தனக்கே உரிய முறையில் மீன்கனின் அளவும் வெற்றிடங்கள் இன்மையால் என்றான். மீனினுடைய கண் எவ்வளவு சிறியது; அந்த அளவு நிலங்கூடப் பண்படுத்தப்படாத தரிசு கிடையாது என்றால் அம் மக்கள் உழைப்பை என் என்று கூறுவது? ஒரு நாட்டில் பண்படுத்தப் பெறாத தரிசு நிலம் இருக்கிறது என்றால் அதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று நீர்வளம், இல்லாமல் இருப்பது; அது இருந்தும் மக்கள் உழைப்பில்லாமல் இருப்பது. ஏமாங்கத நாட்டில் நீர்வளம் மிகுதி என்று ஆசிரியர் கூறிவிட்டமையின் இப்பொழுது மீன் கண் அளவு இடம்கூட வெற்றிடம் இல்லை என்றார். அதனால் அவர்கள் உழைப்பை அறிவித்தவாறு ஆயிற்று.

இவ்வளவு உழைத்துப் பொருள் தேடும் அம் மக்கள் எவ்வாறு அப்பொருளைச் செலவு செய்கிறார்கள் என்று தெரிய வேண்டாவா? பொருளைச் சேகரிப்பது யாவருஞ் செய்யக்கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/177&oldid=659885" இலிருந்து மீள்விக்கப்பட்டது