பக்கம்:புதிய கோணம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புதிய கோணம்


,* 8,8 *

முத்தமிழ் நான்மறை ஞான சம்பந்தன்

ஒண் தமிழ் மாலை கொண்டு ஆம்படி இவை

ஏத்தவல்லார்க்கு அடையா வினையே’

(திருமுறை. 3, 2, t)

ஆரியத் தொடு செந்தமிழ் பயன் அறிகிலா அந்தகர்க்கு எளியேன் ஆலேன்’

(திருமுறை 3, 39, 4)

என்றெல்லாம் பாடிக் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. தாம் பாடிய பதிகங்கள் அனைத்திலும் இறுதிப் பாடலில் தம் பெயரைக் கூறும் பொழுது தமிழொடு சார்த்தியே கூறுவது ஏன் என்பதை ஒருவாறு அறிய முடிகிறது. மொழிக்கும், பண்பாட்டிற்கும் இடுக்கண் வரும் பொழுதுதான் இவ்வளவு தூரம் இதனை வலியுறுத்திப் பாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன் பிறகு 15ஆம் நூற்றாண்டு முடிய தமிழர் வாழ்வில் அதிக இடையூறுகள் எதுவும் நேரவில்லை. 14, 15ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் மன்னர்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கினர். 16 ஆம் நூற்றாண்டில் இவர்கள் பெயர் கூறக்கூட ஆள் இல்லாமல் போய்விட்டது. அதைவிட இன்றியமையாத ஒரு நிகழ்ச்சியும் இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/188&oldid=659897" இலிருந்து மீள்விக்கப்பட்டது