பக்கம்:புதிய கோணம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் தமிழைப் பாடியது ஏன்? 181

நடைபெற்றது. 13ஆம் நூற்றாண்டின் முடிவில், 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் மன்னர்கள் யாரும் பெயர் கூறும் அளவிற்கு இன்மையின் விசயநகரத்தார் செல்வாக்கு ஓங்கிற்று. அவர்களுடன் கருநாடகத்தாரும், பிஜாப்பூர், கோல்கொண்டாப் பகுதி இஸ்லாமிய மன்னர்களும், தத்தம் செல்வாக்கைத் தமிழகத்தில் செலுத்தி வந்தனர். இந்த 3 அல்லது 4 நூற்றாண்டுகளில் தமிழ் மொழியின் நிலை மிகவும் கீழ் இறங்கிவிட்டது. மறுபடியும் தமிழர் தம் தாய் மொழியை மறந்து ஆட்சியாளர் மொழியில் ஈடுபாடு கொண்டு நிற்கும் அவலநிலை தோன்றலாயிற்று. இந்த நிலையில் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றினார் குமரகுருபரர் என்ற பெரியார் கருவில் திருவுடைய இப்பெரியார் வாய் பேசாதிருந்து, செந்தில் ஆண்டவன் திருமுன்னர்க் கிடத்தப்பெற்ற பொழுது வாய் திறந்து பூமேவு செங்கமலப் புத்தேளும்’ என்று தொடங்கும் கந்தர் கலிவெண்பாவைப் பாடத் தொடங்கினார். இறையருளைப் பூரணமாகப் பெற்றுப் பாடினவர் எனினும் அப் பாடலில் முருகப் பெருமான் “இடுக்கண், எல்லாம் பொடி படுத்து எவ்வரமும் தந்து புகுந்து, உல்லாசமாக உளத்து’ இருக்கின்ற நிலையில் அவனிடம் முற்றும் துறந்த முணிபுங்கவர் வரம் ஒன்று வேண்டுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/189&oldid=659898" இலிருந்து மீள்விக்கப்பட்டது