பக்கம்:புதிய கோணம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 புதிய கோணம்

பழமையான காலத்திலேயே அரிஸ்டாட்டிலையும், பிளேட்டோவையும், சாக்ரடீஸையும் உற்பத்தி செய்து, கிரேக்க சமுதாயத்தில் இருக்கும் இந்த ‘மித்தாலஜி” கணக்கில் அடங்காதவை. அப்படியானால், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் முதலானவர்கள் பகுத்தறிவாளர்கள் இல்லையா? இந்தப் பழைய கதைகளை ஏன் நம்பினார்கள் என்றால், அவர்கள் உண்மை அறிந்தவர்கள். இந்தக் கதைகள் ஆராய் வதற்காக ஏற்பட்டவை அல்ல. அவை இந்த சமுதாயத்தை வளர்ப்பதற்கான உரமாகப் பயன் பட்டன என்பதனை அறிந்திருந்தனர். அதனால் தான் யாரும் அதை குறை சொல்லவில்லை. அதேபோல் நம்முடைய தமிழகத்திலும் எத்தனையோ கதைகள் உண்டு. அந்தக் கதைகள் ஆராய்ச்சிக்கு உரியவை அல்ல. -

இன்று வளர்ந்துவிட்ட அறிவை வைத்துக் கொண்டு அந்தக் கதைகளுடைய தன்மையை ஆராய்ந்து, இது நடந்ததா, நடக்கவில்லையா, இது செம்மையானதா, இல்லையா என்றெல்லாம் ஆராய்வது பொருத்தமற்றதாகும். எந்தெந்த காலத்தில் இந்த சமுதாயத்திற்கு ஓர் கருத்தை அறிவிப்பதற்கு எத்தனை கதைகள் தேவைப்பட்டனவோ, அவை அவ்வப்பொழுது உண்டாக்கப்பட்டன; அல்லது பழைய கதைகளுக்குப் புதிய வடிவு கொடுக்கப் பட்டன. அல்லது புதிய கதைகளுக்கு பழைய வடிவு கொடுக்கப்பட்டன. இப்படி மாறி மாறி இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/206&oldid=659918" இலிருந்து மீள்விக்கப்பட்டது