பக்கம்:புதிய கோணம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 புதிய கோணம்

நிறைந்து காணப்படுகின்ற அடிப்படை உடையன. அதே போல இந்திய சமுதாயத்தில் மித்தாலஜி”

என்று சொல்லப்படுகின்ற பழைய கதைகள் நிரம்ப உண்டு. முக்கியமாக இராமாயணம், மகாபாரதம், பதினெண்புராணங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பிற்காலத்தில் கந்தபுராணம் முதலியவை தெய்வத்தைப்பற்றியோ, மனிதர்களைப் பற்றியோ, அரக்கர்களைப் பற்றியோ சொல்லி

இருக்கலாம். யாரைப்பற்றி சொன்னார்கள் என்பது முக்கியமல்ல. அதில் சொல்லப்பட்ட ஒரு சில கருத்துக்கள் அந்தந்தக் காலத்திற்கு அந்தந்த சமுதாயத்திற்குப் பெரும் உரமாக இருந்து, அந்த சமுதாயத்தை வளர்க்க உதவின என்ற அளவில் அதை எடுத்துக் கொள்வோமேயானால், அதன் இடத்தில் வெறுப்பு கொள்ளவோ, காழ்ப்பு கொள்ளவோ, பைத்தியக்காரத்தனம் என்று சொல்லவோ மாட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/208&oldid=659920" இலிருந்து மீள்விக்கப்பட்டது