பக்கம்:புதிய கோணம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பாரதி - சித்தன்

1882ல் எட்டையபுரத்தில் பிறந்த சின்னசாமி ஐயர் மகன் கப்பிரமணியன் கருவில் திருவுடையவர் என்பதை எளிதில் அறிய முடியும். தமது ஏழாவது வயதிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் மிக்க இப் பெருமகனார்க்கு 1893ல் பாரதி என்ற பட்டம் வழங்கப்பெற்றது. 1908ல், புதுச்சேரியில் அடைக்கலம் புகுகின்றவரை கவிஞர் சுப்பிரமணிய பாரதி ஏனைய கவிஞர்கள் போலவே பொருளாழம் மிக்க கவிதைகள் புனைவதில் வல்லவராய் இருந்தார் என்பதில் ஐயம் ஏதுமில்லை. -

சிறந்த கவிஞராகிய இவரை மிகச் சிறந்த ஆன்மீக வாதியாக மாற்றி ஒரு மாபெரும் சித்தனாக மாற்ற வேண்டும் என்று அவன் வழிபட்ட சக்தி அன்னை திருவுளம் கொண்டாள்.

பரம்பொருளின் இச்சா சக்தி இவ்வாறு ஆன மையின் அதற்கேற்ற ஒரு சூழ்நிலை உருவாயிற்று. சூரத் காங்கிரஸ் சென்றுவிட்டு வந்த கவிஞனை ஆங்கில அரசாங்கம் கைது செய்ய முடிவெடுத்தது. அதனை ஏற்றுக் கொள்ள விரும்பாத கவிஞன் புதுச்சேரி சென்று விட்டான். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! என்று பாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/209&oldid=659921" இலிருந்து மீள்விக்கப்பட்டது