பக்கம்:புதிய கோணம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 புதிய கோணம்

foun கேவலம் சிறைக் கூடத்திற்கு அஞ்சி பாண்டி வந்தான் என்று நினைப்பது பெரும் தவறாகும். பாண்டிக்கு அவன் செல்லவில்லை. மாகாளியின் திருவருள் அவனை இழுத்துச் சென்றது. அவ்வாறு செல்லவில்லையானால் தேடிச் சோறு நிதம் தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசும் ஏனைய மாந்தரைப் போல அவனும் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியனாகவே வாழ்ந்து மடிந்து இருப்பான். நாட்டுப்பற்றுமிக்க அவன் மக்களைத் தட்டி எழுப்பும் நாட்டுப் பாடல்கள் இயற்றி உள்ளதைப் போல இன்னும் பல பாடல்களை இயற்றி இருப்பான் என்பதில் ஐயமில்லை. அதி அற்புதமான இந்தப் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குத் தேவையானது என்பதில் ஐயமில்லை. ஆனால் நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகு இப்பாடல்கள் காலத்திற்குப் பொருந்தாதவையாக ஆகிவிடுதல் இயற்கைதானே.

எனவே, அன்னை பராசக்தி “நல்லதோர் வினை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிய’ விரும்பாமல் ‘சுடர்மிகும் அறிவுடன் படைக்கப்பட்ட இவனை புதுவைக்கு அனுப்புகிறாள். மிகும் அறிவு, கேவலம் உலகியல் பொருள்களில் ஈடுபட்டுத் தன்னை இழந்து விடாமல் இருக்க புதுவையில், உள்ள இருவர் தொடர்பு இத்திருமகனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே பராசக்தியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/210&oldid=659923" இலிருந்து மீள்விக்கப்பட்டது