பக்கம்:புதிய கோணம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 புதிய கோணம்

கருணையுடைய கவிஞன் நமக்காக அதன் விளக்கத்தை இங்கே கூறுகிறான்.

‘வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி, மண்போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும், தேசுடைய பரிதியருக் கிணற்றினுள்ளே தெரிவதுபோ லுனக்குள்ளே சிவனைக் காண்பாய்.”

(பாரதி கவிதைகள்)

ஓயாது நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தவுடன், வெளியே விட்டு விடாமல் குறிப் பிட்ட வினாடிகள் வரை அதனை உள்ளே இருத்துவதைக் கும்பகம் என்பர். அதாவது பிராணயாமம் என்று குறிக்கப்படுவது இதைத் தான். நீண்ட நேரம், நீண்ட காலம் இதைப் பயில்வதால் மனம் ஒடுங்கும். அந்த நிலையில் மழை விழுந்து கரைவது பற்றியும், வெயில் அடித்துக் காய்வது பற்றியும் கவலைப் படாமல் நிற்கும் குட்டிச் சுவர் போன்ற ஸ்திதப் பிரக்ஞ மனோநிலை உண்டாகும். இரட்டைகள் என்று சொல்லப் பெறும் சிதம், உஷ்ணம்; சுகம், துக்கம்: மானம், அவமானம் ஆகியவற்றை ஒன்றாக நோக்கும் சமதிருஷ்டி ஏற்படும். அந்த நிலை வந்த உடன் எங்கோ இருக்கும் பரமசிவம் தன் உள்ளத்தின் உள்ளே ஒளிர்வதைக் காணமுடியும். - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/222&oldid=659936" இலிருந்து மீள்விக்கப்பட்டது