பக்கம்:புதிய கோணம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கோணம் 15

யாரைப் பாதிக்கின்றனவோ அவர்களுடைய மாசைத் துடைத்து ஒளி விடச் செய்யப்பயன்படுகின்றன.

இதனை அடுத்து, மதுரை எரியக் காரணம்


வெள்ளி வாரத்து ஒள்ளியுண்ண, உரைசான் மதுரையோடு அரைசு கேடுறும் எனும், உரையும் உண்டே நிரைதொடி’ (சிலம்பு 23, 135)

என்று மதுராபதித் தெய்வம் கூறியதனால், மதுரையின் அழிவுக்கும் பாண்டியன் இறப்புக்குங் கூடத் தான் நேரான காரணமல்லள், துணைக் காரணமே என்பதைக் கண்ணகித் தெய்வம் நன்கு அறிகின்றார்.

எனவே, மதுரையை அரசோடு ஒழிப்பேன்’ என்று வஞ்சினம் கூறிய பெருமாட்டி, அவை இரண்டையும் தாம் செய்வதற்குத் தேவையே இல்லையென்பதையும், இந்த அண்டத்தின் சட்டத்தில், அறிவுக்கு அப்பாற்பட்ட இயக்கத்தில், ஏனைய உயிர்களைப் போலத் தாமும் ஒரு சிற்றுயிரே என்பதையும், நிகழ்ச்சிகள் நிகழப் பிறஉயிர்கள் துணைக்காரணமாக அமைவதுபோலத் தாமும், பாண்டியன் மரணம், மதுரையின் அழிவு ஆகிய மாபெரும் நிகழ்ச்சிகட்குத் துணைக்காரணமாகவே அமைய நேர்ந்தது என்பதையும் அறிந்தார்போலும், பிற குற்றங்களிலிருந்து இயல்பாகவே நீங்கி, இறுதியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/23&oldid=659944" இலிருந்து மீள்விக்கப்பட்டது