பக்கம்:புதிய கோணம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 புதிய கோணம்

தகைய பெண்ணுக்கு “மோட்சம்” என்று கூறப்படும் வீடுபேறு இல்லை என்றும், அவள் அடிமை என்றும், ஒதுக்கப்பட வேண்டியவள் என்றும் கூறும் அறியாமை இடைக்காலத்தில் தமிழ் நாட்டில் புகுந்த “தொத்து வியாதி”. இந்த நோய்க்குக் கற்றவர், கல்லாதவர், பெரியவர், சிறியவர் என்ற பல திறத்தாரும் பலியாயினர். “பெண்டாட்டி கால் விலங்கு, பிள்ளை ஒரு சுள்ளாணி’, என்று பாடும் போலி வேதாந்தம் நாட்டில் புகுந்தது. இந்த அவல நிலையைப் போக்கவே திருஞானசம்பந்தர் தோன்றினார்.

தமிழன் கண்ட பெண்ணின் பெருமையை நிலை நாட்டப் பிறந்த அப்பெரியார் எடுத்த எடுப்பிலேயே “தோடு உடைய’ என்று தம் பாடலைத் தொடங்கினார். தோடு என்பது பெண்கள் அணியும் காதணி என்பதை அனைவரும் அறிவர்."பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று தேவாரத்தில் பாடிய பெருமை ஞானசம்பந்தருக்கே உரியது. எனவே திரு.வி.க.வுக்கு இளமையிலேயே ஞானசம்பந்தர் தூக்கி நிறுத்திய கொள்கையில் தோன்றிய ஈடுபாடு வாழ்நாள் முழுவதும் நிலைத்து விட்டது. ஞானசம்பந்தரைக் குருவாகத் திரு.வி.க. கொண்டு இருந்தமைக்கு முதலாவது காரணம் அப்பெருமான் உலகிற்குப் “பெண்ணின்பெருமையை” எடுத்துக் காட்டியதே ஆகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/238&oldid=659954" இலிருந்து மீள்விக்கப்பட்டது