பக்கம்:புதிய கோணம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 புதிய கோணம்

கிடக்கும் அக்கலைஞர்களை நினைவில் கொண்டு வரவில்லை ஆனால், நன்றி கொன்றவர்களாவோம்.

நம் தமிழ்நாட்டை இற்றைய நாளில் ஒரு கண்ணோட்டம் விடுபவர்கள் இங்குள்ள குறையை அறியாமல் இருக்கமுடியாது. கலை வளர்க, வாழ்க என்று வாழ்த்தும்போது கலைஞர்களைப் பற்றி எவ்வளவுதூரம் கவலைப்படுகிறோம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலைஞனை வாட்டி வதங்க விடுகின்ற எந்த நாட்டிலும் சிறந்த கலை வளர்த்து விடமுடியாது. எத்துணைச் சிற்பக் கலைஞர்கள், எத்துணை இலக்கியக் கலைஞர்கள், எத்துணை நாடகக் கலைஞர்கள் இன்று கேட்பார் அற்றுத் தமிழ் நாட்டில் முடங்கிக் கிடக்கின்றனர் என்பதை யாரேனும் சிந்தித்தது உண்டா? நம்மில் பலர் அறிய எத்துணை நாடகக் கலைஞர்கள் வாழ வகையின்றித் தத்தம் கடைகளை கட்டிவிட்டனர் என்பதையேனும் சிந்தித்தது உண்டா? நம்முடைய ஆர்வம் உண்மையானதாக இருக்குமாயின், நம்முடைய கலைகள் வளர்ந்து மறுபடியும் உலகம் போற்றும் நிலையை அடைய வேண்டுமென்று விரும்புகின்ற விருப்பம் பொருளுடையதாக இருப்பின், கலைஞர்களை வாழ வைக்கவேண்டும். தமிழனைக் கொன்று தமிழையும், கலைஞனையும் விட்டுவிட்டுக் கலையை வளர்க்க முயல்வது இயலாத காரியம், கலைஞர்களை வளர்த்தால் கலைகள் தாமே வளரும், செடிக்கு உரமிட்டு நீர் பாய்ச்சினால் காய்கள் தாமே வெளிப்படும். காய்களைப் போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/244&oldid=659962" இலிருந்து மீள்விக்கப்பட்டது