பக்கம்:புதிய கோணம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 புதிய கோணம்

மனிதனுக்குப் பொறிகள் (புலன்கள்) ஐந்தாயினும் இவை ஒவ்வொன்றும் தத்தமக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமேயானால் மனத்தின் தொடர்பின்றி நடவாது.

மனம் என்று எடுத்துக் கொண்டால் புறமனம், -2&locoru, -ggp106718 (External mind, Internal mind, deeper conscious mind), gras epcrpre ag Ligosf புரிகிறது. சாதாரண விஷயங்களைப் பார்க்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, கண் அல்லது

செவியுடன் மனம் ஈடுபட்டு அச்செயலைச் செய்கின்றது.

என்றாலும் இப்புறமனம் ஒருதலையாக

இல்லாமல் சலித்துக்கொண்டே இருக்கும் இயல் பினை உடையது. ஒரு சொல்லைக் காதில் வாங்கினால் அடுத்த இரு சொற்கள் வரும் பொழுது முதற் சொல்லை மறந்து விடுகின்ற இயல்பு மனத்திற்கு உண்டு. இக்குறை நீங்க மனத்தின் சலிப்புத் தன்மையை (Wavering) நிறுத்தி, எந்த ஒரு பொறியின் இடம் ஈடுபடுகிறோமோ அந்தப் பொறியினிடம் நிலைநிறுத்தப் பழக வேண்டும்.

வேறு வகையில் கூற வேண்டுமேயானால் பார்த்தல், கேட்டல் முதலிய எந்தத் தொழிலைச் செய்தாலும், புறமனம் சலிக்காமல் அந்தச் செயலில் நிலை பேறுடையதாக அமையுமானால் மூளையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/248&oldid=659967" இலிருந்து மீள்விக்கப்பட்டது