பக்கம்:புதிய கோணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொப்பரைத் தேங்காய் 23

காணலாம். அக்காட்சி பயனுடையதே அன்றோ? இந்த அடிப்படை மனநிலையை, புத்தனை வாழ்த்தும் பகுதியில் மணிமேகலை நன்கு விளக்குகிறது. பாத்திரம் பெற்ற மணிமேகலை, ‘மாத்திரை இன்றி மன மகிழ்வு எய்தி இதோ கூறத்தொடங்குகிறாள்:

“மாரனை வெல்லும் வீர நின்னடி

நெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்னடி கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி திமொழிக்கு அடைத்த செவியோய் நின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு அடங்காது. 5 *

(ost fl 11 : 61 -71)

புத்ததேவனுடைய வாழ்விலும் முற்பட்ட !!..!! .3 பிறப்புகளிலும் அப்பெருமகன் செய்த அறச் செயல்கள் பற்றிய குறிப்புகளாகும் இவை, எனினும், இவற்றிடையே அமைந்துள்ள பொதுத்தன்மையை யாரும் அறியாமல் இருக்க முடியாது. இச்செயல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/31&oldid=659993" இலிருந்து மீள்விக்கப்பட்டது