பக்கம்:புதிய கோணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொப்பரைத் தேங்காய் 25

கண்டு அவ்வெற்றிக்கு விலையாகத் தம் உயிரையே பணயம் வைத்துப் பலியாகின்றவர்களும் உண்டு. அத்தகையவர்களுள் ஒருவனாகப் புத்ததேவன் ஆகிவிடாமல் மாரனை வெற்றிகண்ட பிறகும் வாழ்ந்த வீரனாவான் ஆகலின் ‘வீர’ என்று விளிக்கப் படுகிறான். புறப்ப்கை அனைத்தையும் வெல்வதை வீரம் என்று கூறுவதைக் காட்டினும் அகப்பகையை வெல்பவர்களையே வீரர் என்று இத்தமிழ்நாட்டவர் போற்றினர்.

மாரனை வென்ற பிறகும் தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்று மணிமேகலை கூறுவதில் ஓர் ஆழ்ந்த கருத்துள்ளது. துறவு என்ற அதிகாரத்தின் பின்னர் அன்றோ அவா அறுத்தல் என்ற அதிகாரத்தை வள்ளுவர் வைத்துள்ளார். ஏன்? அவாவை அறுத்துத்தானே துறவை மேற்கொள்ள முடியும்? அவ்வாறு இருக்கவும் அவா அறுத்தலை ஏன் பின் அதிகாரமாக வைக்கின்றார்? இதற்கு அமைதி கூறவந்த பரிமேலழகர் ‘பழைய பயிற்சி வயத்தால் ஒரோவழிப் புலங்கள்மேல் பற்றுச் செல்லுமன்றே! அதனை ஓயாது நோக்கிப் பரிகரிக்கவே அவா அறுத்தலைத் துறவின் பின்னர் வைத்தார் என்று எழுதியது இங்கு நோக்கத் தக்கது. ஒருமுறை மாரனை வென்று துறவு பூண்ட புத்ததேவன் தீநெறியாம் கடும்பகையை ஓயாது கவனித்துப் பரிகரித்தான் என்பதையே இரண்டாம் அடியால் குறிக்கிறாள் மணிமேகலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/32&oldid=659994" இலிருந்து மீள்விக்கப்பட்டது