பக்கம்:புதிய கோணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புதிய கோணம்

ஆட்சியாளன். ஐந்தாண்டுத் திட்டங்கள் வெகுவாக நடைபெறும் இக்காலத்தில் நமது அரசியலாருக்கு எலிக் கூட்டத்தார் நட்பினராக ஆகாமல், புலிக கூட்டத்தார் நட்பினராக ஆனால் எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்!

ஆட்சியாளர் இன்றும் அன்றும் நாட்டுக்கு எவ்வாறு நன்மை புரிகின்றனர்? பொதுமக்கள் தருகின்ற இறைப்பணத்தை (வரி வைத்துத்தானே ஆட்சி நடைபெறுகிறது? இன்றும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று அன்றோ? எவ்வாறு புதிய வரிகளைப் போட்டுப் பணம் சேகரிக்கலாம் என ஆட்சியாளரும், எவ்வாறு வரிச்சுமையைக் குறைக்கலாம் எனப் பொதுமக்களும் சிந்தித்தல் இயற்கை, புதிய வரிகளைப் போடுதலில் எந்த அளவைக் கொள்வது என்பதுபற்றி எந்த அரசிலும் முடிந்த முடிவாக இதுவரை ஒன்றும் கூறப்படவில்லை. கொடுப் போருடைய வன்மைதான் வரி விதிப்போருக்கு அளவாக அமைதல் வேண்டுமே தவிர, அரசியலாருக்கு ஏற்படும் செலவு அளவாக அமைதல் கூடாது. இக்கருத்து இன்றும் சிறந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஒத்துக்கொள்கிற கொள்கையாகும். இக்கருத்தைப் பிசிராந்தையார் என்ற புலவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் அழகிய ஓர் உதாரணத்துடன் விளக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/56&oldid=660022" இலிருந்து மீள்விக்கப்பட்டது