பக்கம்:புதிய கோணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புதிய கோணம்

தவிர வேறு சாட்சியே இல்லை என்று சொல்லி வருந்துகிறாள்.

அந்த அழகிய சிறு கதையைத்தான் பின்வரும் பாடல் தெரிவிக்கின்றது.

“யாரும் இல்லை; தானே கள்வன் தான்.அது பொய்ப்பின் யான்னவன் செய்கோ ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு தான்மணந்த ஞான்றே!” இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் தலைவன் தலைவி சந்திப்பை ஒரு பறவையாவது பார்த்துக் கொண்டிருந்ததே அந்தப்பறவையையாவது சாட்சிக்கு அழைக்கலாமா என்றால் அதுவும் முடியாதென்ற கருத்தைத் தலைவி மிகவும் அழகாக வெளிப் படுத்து கிறாள். குருகும் உண்டு என்று சொல்லும் போது அந்தப் பறவையும் ‘ஒழுகு நீர் ஆால் பார்க்கும் என்று கூறியதால் அந்தப் பாழும் பறவை கூட எங்களைக் கவனிக்காமல் மீன் பிடிப்பதிலேயே நோக்கமாக இருந்துவிட்டது என்று கூறுகிறாள். ஆகவே, தலைவியின் எல்லையற்ற துயரத்தை வெளிப்படுத்துகின்ற இந்தப் பாடலில் “மீன் பிடித்துக் கொண்டு நிற்கின்ற குருகு’ என்று சொல்லியதுதான் எல்லையற்ற சோகத்தைக் காட்டுகின்றது. நான்கு

வரிகளிலேயே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்ட ஒரு சிறு கதையைக் காண்கின்றோம்.

    ir 

} { };

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/62&oldid=660029" இலிருந்து மீள்விக்கப்பட்டது