பக்கம்:புதிய கோணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புதிய கோணம்

அவர்களுடைய மாபெரும் சாம்ராஜ்யம்; பெற்ற வெற்றிகள்; செல்வங்கள் சேகரித்த அளவு, ஆட்சிப் பரப்பின் அளவு. இவைகளைத் தவிர அவர்களைப் பற்றி நினைப்பதற்கு வேறு ஒன்றுமில்லை. ஆனால் 300 கிராமங்களை மட்டும் வைத்திருந்த ஒரு மன்னனைப்பற்றி இன்று நாம் நினைக்க வேண்டியிருக்கிறதென்றால் ஏதோ செயற்கரிய செயலை அவன் செய்திருக்க வேண்டும். தமிழ் நாட்டின் வரலாற்றில், கை அகலம் இடமாகிய இந்தத் தமிழ் நாட்டை சேர, சோழ, பாண்டியர்கள் என்ற முடியுடை மூவேந்தர்கள் மூவர் ஆண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஓயாத போர்; ஒழியாத போர்.

“இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப . . . . . . . . .

(புறம்: 8)

என்று சங்கப்பாடல் பாடும். இப்படி ஒருவருக் கொருவர் போட்டி மனப்பான்மையோடு, ஏதோ பிறப்பிலேயே அவர்கள் பகைவர்கள் என்று நினைக்கின்ற நினைவேர்டு, ஓயாது போராடி மடிந்து கொண்டிருந்த நேரத்தில், சிற்றரசர்களும் நூற்றுக் கணக்கில் இருந்திருக்கிறார்கள். இந்தச் சிற்றரசர்களும், முடியுடை மூவேந்தர்களைப் பின்பற்றி, அவரவர்கள் அவரவர்களுக்கு வேண்டியவர்கள் என்ற முறையிலே, பேரரசர்கள் போரிடத் தொடங்கும் போது சிற்றரசர்களும் தங்களுக்குள் எவ்விதமான பகைமை இல்லாவிட்டாலும், பேரரசர்கள் அடியொட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/64&oldid=660031" இலிருந்து மீள்விக்கப்பட்டது