பக்கம்:புதிய கோணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புதிய கோணம்

மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண்பாற் புலவர், மலையமான திருமுடிக்காரியைப் பாடப் போகிறார். பாடத் தொடங்குவதற்கு முன்னால், அவரையும் அறியாமல் அவருடைய மனம் கூசுகிறது. எதுபற்றிப் பாடுவது திருமுடிக் காரியை ஒரு வள்ளலைப் பற்றிப் பாடுவதற்கா பொருள் இல்லாமல் போய்விட்டதென்ற சந்தேகம் நமக்குத் தோன்றும். அவர் “ஐயா, எதைச் சொன்னாலும், எங்களுக்கு முன்னே இருந்த கபிலன் அதைப் பாடி விட்டானே; என்ன செய்வது” என்று சொல்கிறார்.

“புலன் அழுக்கு அற்ற அந்தணுளன்,

இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி,

பரந்து இசை நிற்கப் பாடினன்’ (புறம்: 126)

என்றவர் அதனை அடுத்து,

“சினமிகு தானை வானவன் குடகடற் பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப் பிறகலஞ் செல்கலா தனையே மத்தை இன்மை துரப்ப விசைதர , வந்துநின்-” (புறம்: 126)

எனப் பாடுகின்றார். அரபிக்கடலிலே சேரன் தன்னுடைய கடற்படையைச் செலுத்தும்போது, குறுக்கே ஒரு சிறிய மரக்கலம் போக முடியாது. அதுபோல, சேரனுடைய கப்பற்படையை எதிர்த்து யாரும் செல்ல முடியாததுபோல, திருமுடிக்காரியின் புகழ் முழுவதையும் தன்னுடைய கவிதை வளத்தாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/76&oldid=660044" இலிருந்து மீள்விக்கப்பட்டது