பக்கம்:புதிய கோணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புதிய கோணம்

இனி, இறுதியாக பறம்பு மலையைப் பற்றி அவர் பாடிய பாடலில் அவலச் சுவையைக் காட்டுகிறார். பாடலை இரண்டாகப் பிரிக்கிறார். என்னுடைய உயிர் நண்பனாம் பாரி இருக்கக்கூடிய காலத்திலே, பறம்பு மலையே, நீ எப்படியெல்லாம் இருந்தாய்; என்னென்ன நிகழ்ந்தது உன்னிடத்திலே இப்போது என்ன நிகழ்கிறது தெரியுமா? என்று சொல்லுகின்ற காட்சி உண்டி உலுக்கும் காட்சியாகும். சோலைகளில் மயில்கள் நடனமாடிடவும், பழகிய மலைகளில் முசுக்கலை தாவி விளையாடுகின்றன. அந்த முசுக்கலைகூட உண்ணவில்லையாம், பழங்களை. ஏன்? அவ்வளவு ஜாஸ்தியாக இருக்கிற காரணத்தால். காலமில்லாமல் மரங்கள் பழுத்துக்கிடக்கின்றன. அந்தப் பெரிய மலையின் உயரமான முகட்டிலே ஏறி, தம் தந்தையான பாரியின் நாட்டை வெல்ல முடியாதென்று தெரிந்திருந்தும்கூட, போர் மேல் ஆசை கொண்டு வந்த மன்னர்கள் தோற்றுத் திரும்புகிறார்களே, அவர்களுடைய குதிரைப் படையை எண்ணுகிறார்களாம். பாரியின் சிறப்பு தெரிய, அங்கு வந்து தோற்று ஒடுகிற மன்னர்களின் குதிரைகளைப் பாரி நாட்டிலேயுள்ள மகளிர் எண்ணுகிறார்களாம். இது அன்றைய நிலைமை. இந்த நிலைமை மாறி, இன்று குளத்திலே பூத்த குவளை மலர்களை இடையிலே கட்டிய இளம் பெண்கள், முள்ளால் கட்டப்பட்ட வீட்டு வேலி, அந்த வேலி.முன் பஞ்சு நிறைந்த வாயில்; அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/90&oldid=660061" இலிருந்து மீள்விக்கப்பட்டது