பக்கம்:புதிய கோணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வள்ளுவன் கண்ட இன்பம்

தலைசிறந்த உலக இலக்கியங்களுள் ஒன்று என வைத்து எண்ணத்தகுந்த திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையுடையது என்பதை அனைவரும் அறிவர். தமிழ்மரபை விளங்கிக் கொள்ள முடியாத வேற்று நாட்டார் சிலரும், தமிழராய்ப் பிறந்தும் தமிழ் மரபை அறியாத தமிழருள் ஒரு சிலரும் குறள் கண்ட மூன்றாவது பாலை வள்ளுவர்தாம் இயற்றினாரா என்று ஐயப்பட்டுப் பேசி எழுதிய காலமும் உண்டு. நல்ல

வேளையாக இன்றைய நாளில் அத்தகைய ஆராய்ச்சியில் புகுவார் யாருமில்லை. முன்னர் கூறிய அச்சிறுபான்மையினரும் காமத்துப்பால் என்ற

பெயரைக் கேட்டவுடன் அதனைத் தவறாகக் கருத்தினரேயன்றி அதனுள் புகுந்து ஆழ்ந்து கற்று இருப்பாரேல் இப்படிப்பட்ட பிழை செய்திரார்.

உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஆண், பெண் பிரிவினையோடு வாழக் காண்கிறோம். மாக்கள் இனத்திலிருந்து வளர்ச்சி அடைந்த மக்கள் இனம், தன் வளர்ச்சியைச் சிறப்பித்துக் காட்டுவதற்கு நிலைக்களனாகக் கொண்டவை பகுத்தறிவும் அதனோடு ஒருங்கு வைத்து எண்ணத் தகுந்த உணர்ச்சியுமேயாகும். விலங்குகளுக்கும் உற்றுணர்வு உண்டு எனினும் ஒரு முறை அனுபவித்த ஒன்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/93&oldid=660064" இலிருந்து மீள்விக்கப்பட்டது