பக்கம்:புதிய கோணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 புதிய கோணம்

மறுபடியும் நினைவுக்குக் கொணர்ந்து அந்நினைவின் அடிப்படையில் இன்ப துன்பம் ஆகிய உணர்ச்சி களைப் பெறுதல் மக்களை அல்லாத பிறவற்றுக்கு இயலாதகாரியம். எனவேதான் மக்கள் பிறப்பை உயர்ந்தது என்றும், உயர்திணை என்மானார் மக்கட் சுட்டே (தொல்காப்பியம்) என்றும் பெரியோர் பேசிப்போயினர். உற்றுணர்வு ஒன்றையல்லாமல், சிந்தித்தும் நினைத்தும்கூட உணர்ச்சியைப் பெறக் கூடும் என்ற அடிப்படையை நன்கு அறிந்த தமிழர் காமத்தை இவ்வுணர்வின் அடிப்படையில் கண்டனர். ஏனையவர்கள் போல் காமத்தை உடலோடு மட்டும் தொடர்புடையதாகக் கொள்ளாமல் உள்ளத்தோடு பெரிதும் தொடர்புடைய ஒன்றாகவே கண்டார்கள்.

தமிழர் மரபை வள்ளுவப் பெருந்தகை மிக நன்கு அறிந்திருந்தார் என்பது அவருடைய காமத்துப் பாலைக் கற்போர் நன்கு அறிதல் கூடும். இல்லையேல், -

“மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்’ • ‘ (குறள்-1289)

என்ற குறளை அப்பெருந்தகை பாடியிருக்கக் காரணம் இல்லை. புல் பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக அனைவருமே அனுபவிப்பது காம இன்பம் எனின், உலக வளர்ச்சிக்கு இதுவே உறுதுணையாய் அமைந்துள்ளது எனின், சிலர் அதனை, செவ்வி தலைப்படுவார் என அனைவரில் இருந்து சிலரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/94&oldid=660065" இலிருந்து மீள்விக்கப்பட்டது