பக்கம்:புதிய கோணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவன் கண்ட இன்பம் 87

பிரித்துக் கூறக்காரணம் இல்லை. இவ்வாறு கூறியதால் செவ்வி தலைப்படும் சிலரையல்லாத பலர் அதனை அறியவில்லை என்பதும் நன்கு விளங்கும். அனைவருமே அனுபவிக்கிற காமமாகிய ஒன்றை, சிலரே அதன் செவ்வியை (பக்குவம்) அறிவார் என்று வள்ளுவர் கூறினால், அனைவரும் அனுபவிக்கின்ற காமத்தையல்லாமல் தனிப்பட்ட வேறொன்றைப் பெரியார் கூறுகின்றார் என்று நினைக்கத் தோன்றும். காதல் உணர்ச்சியில் ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து இன்பம் பெறுகிறார்கள் எனினும், அவ்வாறு சேர்ந்தவர்கள் அனைவரும் காதலை அறிந்தவர்கள் என்று கூறிவிட முடியாது. இருவர் சேர்ந்த மாத்திரத்தில் அவர்கள் இருவரும் காமத்தின் செவ்வியை (பக்குவத்தை) அறிந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. பால் வேறுபாட்டு மனோதத்துவத்தை (Sexual Psychology) மிகப்பெரிய அளவில் ஆராய்கின்ற மேனாட்டுக் காரர்கள் இப்போது பெரிதுபடுத்திப் பேசி வருகின்ற ஓர் உண்மையாகும் இது. இல்லறம் நடத்துபவர்கள் அனைவரும் காதல் உணர்ச்சியை அறிந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. நூறு ஆண்டுகள் குடும்பம் நடத்தியவர்கள்கூடக் காதல் என்றால் இன்னது என்று அறியாமலே குடும்பம் நடத்தி, குழந்தைகள் பெற்று, இன்பகரமான வாழ்க்கை நடத்திவிட்டதாக எண்ணிக் கொள்ளலாம். என்றாலும், இவ்வளவும் நடைபெற்றுவிட்ட காரணத்தால் மட்டும் இத்தலைவன் தலைவியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/95&oldid=660066" இலிருந்து மீள்விக்கப்பட்டது