பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 குடியிருப்போர் மூவர். கணவன் ; மனைவி; மனைவியின் தாயார். கணவன், வயலிலே வேலை செய்துகொண்டிருந்தார். மனைவி, அலுவல் பற்றி, வயலிலிருந்து, பண்ணை அலுவலகத்திற்கு அப் போதே வந்தார். அவர் எங்களோடு வந்து விட் டைக் காட்டினர். விட்டுக்குப் போகும் வழியில், என் தாய்க்கு வயது எழுபத்தெட்டு. என் தங்தை சில மாதங் களுக்கு முன்பு இறந்து விட்டார். அ று ப து: ஆண்டு காலம் த ன் ே ைடு வாழ்ந்த கணவர். மறைந்த, அதிர்ச்சியில், என் தாய் ஏங்கிக் கொண் டிருக்கிரும். அவரிடம் குடும்பம் பற்றி எதுவும் கேட்டு விடாதீர்கள். அழுது விடுவார்’ என்று எங்களே எச்சரித்தார். விட்டுக்குள் நுழையும் போது அம் மூதாட்டி, ஆக்கத்தை அடக்கிக் கொண்டு, வலிந்த புன்முறுவ லோடு எங்களை வரவேற்ருர். காட்பஸ் நகரில், புதிய குடியிருப்புகளில், காவல் துறையினர் வீட் டில் கண்ட தொலைக்காட்சி,குளிர்பெட்டி,வானுெலி முதலிய கருவிகள் இவ்வீட்டிலும் இருந்தன. சோபா செட்டுகளும் மேசை நாற்காலிகளும் காட்சி யளித்தன. * * குடியானவர்களுக்கும் மற்றவர்களுக்குள்ள எல்லா வசதிகளும் உண்டு என்பதைக் கண்ணுரக் கண்டு மகிழ்ங்தோம். குடியானவர்கள் பலர் மோட் டார்கார் வைத்துக் கொண்டிருக்கிருர்கள்.