பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

நூற்று நாற்பது நாடுகளிலிருந்து வந்துள்ள னா' என்பது பதில். H

வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை பேர்? இது கேள்வி. எட்டாயிரத்து நூற்று காற்பத்தைந்து வெளி நாட்டு மாணவர்கள் இங்கு படிக்கிருர்கள்.'

இங்கே எம்மொழியில் கற்பிக்கிறீர்கள்?" ஜெர்மன் மொழியில்’ :ஜெர்மன் மொழியைப் பாட மொழியாகக் கொள்ளும் அளவிற்குப் போதிய ஜெர்மன் மொழித் தேர்ச்சி அவர்களுக்கு உண்டா?’

"பலருக்கு இல்லை. அவர்களுக்கு ஜெர்மன் மொழியில் பயிற்சி கொடுப்பதற்கென்று, தனி யான கல்விக் கழகம் ஒன்று கடக்கிறது. அங்கே ஓராண்டு காலம் ஜெர்மன் மொழியைக் கேட்கவும் பேசவும் படிக்கவும் கற்றுக்கொண்ட பிறகு, பல்கலைக் கழகப் பாடங்களைக் கற்க ஈடுபடுவார் கள்' என்று துணைவேந்தர் விளக்கினர்.

உங்கள் பல்கலைக் கழகம் ஜெர்மனியில் இயங்குகிறது. ஆனல் ஜெர்மனியர்களுக்காக மட் டும் இயங்கவில்லை. அனைத்துலக இளைஞர்க ளுக்கும் பல்கலைக் கழகமாக இருக்கிறது. இது போற்றத்தக்கது. ஒரே ஒரு ஐயம். உங்கள் காட்டு இளைஞர்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்கிற பாடப் பகுதியில் இடம் கொடுப்பிர்களா?'

"மாணவர்கள் விருப்பத்தைத் தெ ரிங் து கொண்டு, அதையொட்டி பல்கலைக் கழகப் பாடப் பிரிவுகள் சேர்க்க முயற்சிக்கிருேம். ஆணுல் மான வர்கள் விருப்பமே முடிங்த முடிவல்ல.