பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 ஐரோப்பிய நாடுகளில், பல்கலைக் கழகம்’ என்ற பெயரில் கடக்கும் கல்வி நிலையங்களோடு, அகெடமி கழகம்’ என்ற பெயரில் நடக்கும் புகழ் பெற்ற கல்வி நிலையங்களும் உள்ளன. இரண் டிற்கும் வேறுபாடு என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். 'குறிப்பிட்ட ஒரு துறை பாடத்தை மட்டும் கற்பதில், ஆய்வதில், ஈடுபட்டுள்ள கல்வி கிலே யத்தை அகெடமி என்று அழைப்போம். எடுத் துக்காட்டாக, பொருளாதாரத்தைப் பற்றி உயர் படிப்பில், ஆய்வில், ஈடுபட்டுள்ள கல்வி கிலே யத்தை பொருளாதார அகெடமி என்போம். வேறு பாடம் அங்கே கெருங்கக் கூடாதென்று பொருளல்ல. பூகோளம், அரசியல் ஆகியவை பொருளாதாரத்தைப் பாதிப்பன. எனவே தொடர் புடைய அவைகளும் பொருளாதார அகெடமியில் சேர்ந்திருக்கலாம். இதற்கு மாருக, பல்கலைகளே, பல துறைக் கல்வியைக் கொடுப்பதற்கும் அவற் றில் ஆய்வினைத் துாண்டவும் ஏற்படுத்தப்பட் டுள்ள கல்வி கிலேயங்களை பல்கலைக்கழகம் என்று அழைப்போம். சுருக்கமாகக் கூறுவதாணுல், பல்கலையும் ஒரமைப்பில் வளரும்போது அது பல்கலைக் கழகம். ஒரு பெருங் கலேயே ஓரமைப் பில் வளரும்போது கழகம் அல்லது அகெடமி.' இவ் விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருக் கும் போதே, ஒர் இளம் பெண்ணும் ஓர் வாலிபனும் எங்கள் அறைக்குள் நுழைந்து, துணைவேந்தருக்கு வணக்கஞ் செலுத்தினர்.