பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஜி. டி. ஆர்-இந்திய நட்புறவுக் கழகம் நான் பலவற் றையும் காண உதவிற்று. பொதுவாக அக் கழகத்திற்கும், சிறப்பாக அதன் செயலர் தோழர் கேஷருக்கும் நான் நன்றி யுடையேன். H (அங்கே, நான் கண்ட சிறப்புகள் பல; வளர்ச்சிகள் பல; அவற்றிலெல்லாம் சிறந்தது, பொது மக்களிடம் எதிர்காலத் தைப் பற்றிய பரவலான நம்பிக்கை. அந்நம்பிக்கை, பாலர் கண்களிலும் ஒளிவிடுகிறது; விருத்தர் விழிகளிலும் வீசு கிறது. ஆலேத் தொழிலாளரின் வாழ்க்கைத் தரமும் பண்ணை நூட்களின் வாழ்க்கை வசதிகளும் ஒரு நிலையாக தன்னிலையில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். புதிய ஜெர்மனியில் எல்லா நிலைக் கல்வியும் இலவசம். எந்த வயதிலும் கல்வியை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. எல்லார்க்கும் தொழிற் பயிற்சியெனும் ஊட்டங் கலந்த பள்ளிப்படிப்பு கட்டாயமாக உண்டு. ஆண்களைப் போல் பெண்களும் அறிவு ஆற்றலில் வளர்ந்து சரிநிகர் சமானமாக வாழ்கிருர்கள்.” கல்வியிலும் தொழிலிலும் முன்னேறியுள்ள சமதர்ம நாடாகிய ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு", இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடு. அங்கு நான் கண்டவற்றைப் பற்றி எழுதும்படி, என் இனிய நண்பரும் தினமணி கதிர்’ ஆசிரியருமான திரு சாவி அவர்கள் அழைத்தார்கள். அவரது அன்பு ஆணைக்குக் கட்டுப்பட்டு, தினமணி கதிரில் தொடர்ந்து எழுதியதால் உருவானது, புதிய ஜெர்மனி'யில் என்னும் இந்நூல். ஆசிரியர் சாவி’க்கு எவ்வளவு நன்றி சொன்னுலும் அதிகமாகாது. இந்நூலை நல்ல முறையில் வெளியிடத் துணிந்த, வானதி பதிப்பக உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். க. து. கந்தரவடிவேலு